​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
12 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை-தேனி அகலப்பாதையில் புறப்பட்டுச் சென்ற முதல் ரயில்.. மக்கள் உற்சாக வரவேற்ப்பு.!

Published : May 27, 2022 7:54 AM

12 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை-தேனி அகலப்பாதையில் புறப்பட்டுச் சென்ற முதல் ரயில்.. மக்கள் உற்சாக வரவேற்ப்பு.!

May 27, 2022 7:54 AM

மதுரையில் இருந்து தேனி வரையிலான ரயில் பாதை அகலப்பாதையாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, 12 வருடங்களுக்குப் பிறகு மதுரையிலிருந்து புறப்பட்டு தேனி வந்தடைந்த ரயிலை வழிநெடுகிலும் மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மதுரை-தேனி ரயில் சேவையை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

மதுரை-போடிநாயக்கனூர் இடையேயான 90.4 கி.மீ தூரமுடைய அகல ரயில் பாதை வழித்தடத்தில், தற்போது தேனி வரை 75 கி.மீ தூரமுடைய பணிகள் முடிவடைந்துள்ளது.

விரைவில், தேனி-போடி இடையேயான 15 கி.மீ தூரமுடைய ரயில் பாதை நிறைவு பெறும் பட்சத்தில், போடி-சென்னை வரையிலான ரயில் சேவை தொடங்கும் என தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் தெரிவித்தார்.